தாக்குதல் முயற்சிக் குற்றவாளிகள் - விபரம்!!
1 சித்திரை 2026 புதன் 20:34 | பார்வைகள் : 2779
பரிசில் உள்ள Bank of America அலுவலகத்தை குறிவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலின் ஆணையிட்ட நபருக்கும் செயல்படுத்திய சிறுவர்களுக்கும் இடையே நடுவண் நபராக இருந்தார் என்று சந்தேகிக்கப்படும் 21 வயதான Wakil D. என்பவர்,
தீவிரவாத குற்றச்செயல் குழுவில் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தற்காலிக சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்ட்டுள்ளார்.
Wakil D. முன்பு ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மூன்று சிறுவர்களை 500 முதல் 1,000 யூரோ வரை கொடுத்து இந்த குற்றச் செயலுக்கு ஆளாக்கியதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், 17 வயது சிறுவன் ஒருவன்
650 கிராம் வெடிமருந்து பொருள் கொண்ட கைவினை குண்டை Bank of America அலுவலகத்தின் கதவின் முன் வைக்க முயன்றபோது காவல்துறையால்
கைது செய்யப்பட்டான்.
ஒரு வாரத்திற்கு முன்பு, HAYI எனப்படும் ஈரான் ஆதரவு குழு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள யூத சமூகத்தின் தலங்களைக் குறிவைப்பதாகவும், குறிப்பாக Bank of America அலுவலகத்தையும் குறிவைப்பதாகவும் சமூக வலைதளங்களில்காணொளி வெளியிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட நால்வரும் செயல் நடந்ததை ஒப்புக்கொண்டாலும், தீவிரவாத நோக்கம் இல்லை என்று மறுத்துள்ளனர்.
ஆனாலும் இவர்களின் குண்டுத் தாக்குதல் முயற்சி பயங்கரவாதத் தடைப்பிரிவினரின் விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை முக்கியமானதாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan