உயர்நிலைப் பாடசாலைகளில் கைப்பேசி தடை- செப்டம்பரில் நடைமுறைக்கு வர வாய்ப்பு!!
1 சித்திரை 2026 புதன் 18:59 | பார்வைகள் : 554
உயர்நிலைப் பாடசலைகளில் கைப்பேசிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட முன்மொழிவு செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா, தற்போது இரு சபைகளின் ஒருங்கிணைந்த குழுவின் (CMP) பரிசீலனைக்கு செல்ல உள்ளது. சட்டநடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தால், இந்த புதிய விதிமுறை வரும் செப்டம்பர் கல்வியாண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டுள்ளது. பாடசலை வளாகங்களில் கைப்பேசிகளை பொதுவாகத் தடைசெய்யும் இந்த விதி, சில விசேட சூழ்நிலைகளில் பாடசலை விதிமுறைகளின் அடிப்படையில் விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தடை ஏற்கனவே பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளதுடன், உயர்நிலைப் பாடசாலைகளில் இதை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருக்கும் என கல்வி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதத்தில் செனட் சபை சில கூடுதல் மாற்றங்களையும் செய்துள்ளது. இந்த மசோதா இறுதியாக சட்டமாக மாறுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் நிலவுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan