11 பந்துகள், பல Wide, No-Ball - IPLலில் நீண்ட ஓவர் வீசிய வீரர்
1 சித்திரை 2026 புதன் 12:02 | பார்வைகள் : 1331
IPL 2026-இல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், IPL வரலாற்றில் நீண்ட ஓவராகக் கருதப்படும் 11 பந்துகள் கொண்ட ஓவரை வீசினார்.
அந்த ஓவரில் அவர் 5 Wide பந்துகளையும், 1 No-Ball-ஐயும் வீசினார். இதனால், ஓவர் 11 பந்துகள் நீளமானது.
IPL வரலாற்றில் இதற்கு முன் முகமது சிராஜ் (2023), துஷார் தேஷ்பாண்டே (2023), ஷார்துல் தாக்கூர் (2025), சந்தீப் சர்மா (2025), ஹார்திக் பாண்ட்யா (2025) ஆகியோர் இதேபோன்ற நீண்ட ஓவர்களை வீசியுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். அவரது Economy Rate 10.50-ஆக இருந்தது. இது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் அதிகமானது.
யுஸ்வேந்திர சாஹல் தனது அனுபவத்தை பயன்படுத்தி 4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொண்டு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
விஜய்குமார் வைஷாக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 162/6 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க மட்டுமே முடிந்தது.
இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 165/7 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan