பிரசார விதிமீறல் புகார்; விஜய் மீது போலீஸ் வழக்கு
1 சித்திரை 2026 புதன் 13:04 | பார்வைகள் : 444
சென்னையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, விஜய் பிரசாரம் செய்ததாக கூறி, கொளத்துார் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குமார், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜய் மற்றும் அவரை காண வந்த 3,000 பேர், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் தடையாக நின்றனர். பொது மக்கள், தொண்டர்கள் என, 5,000 பேர் கூடி, 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி, 'ரோடு ஷோ' நடத்தி, போக்கு வரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.
ஆனால், 300 பேர் மட்டுமே கூடி, மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பிரசாரம் செய்யவே அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதை மீறி, மாலை 3:40 மணிக்கு முன்னதாகவே சாலையில் கூடி அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்திய விஜய் மற்றும் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், விஜய் உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் மீது, பெரவள்ளூர் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே போக்குவரத்தை மாற்றம் செய்த போலீசார், அதே இடத்திற்கு விஜய் வந்தபோது, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan