15 பந்தில் 50 ரன் அடித்த வைபவ் சூர்யவன்ஷி! ராஜஸ்தான் ராயல்ஸிடம் சிதைந்த CSK
31 பங்குனி 2026 செவ்வாய் 15:22 | பார்வைகள் : 1406
ஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்தது.
கவுகாத்தியில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தலா 6 ஓட்டங்களில் கிளீன்போல்டு ஆனார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்ட, சென்னை அணி 51 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஒரே ஓவரில் சர்ஃபராஸ் கான் (17) மற்றும் ஷிவம் தூபே (6) ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி CSK அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஜேமி ஓவர்டன் மட்டும் போராடி 36 பந்துகளில் 43 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜோப்ரா ஆர்ச்சர், நான்ட்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், பிரிஜேஷ் ஷர்மா, சந்தீப் ஷர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிதானமாக ஆட, வைபவ் சூர்யவன்ஷி வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர், பவுண்டரி என விளாசிய அவர் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மொத்தம் 17 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த துருவ் ஜுரேல் 18 (9) ஓட்டங்களில் வெளியேற, ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan