Nice-Paris: மார்செயில் சுரங்கத்தில் 8 மணி நேரம் சிக்கிய TGV: 800 பயணிகள் பாதிப்பு!!
31 பங்குனி 2026 செவ்வாய் 15:12 | பார்வைகள் : 587
மார்செயில் அருகிலுள்ள சுரங்க நுழைவில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட ஒரு “நபரின் விபத்து” காரணமாக, Nice-Paris இடையிலான TGV தொடருந்து சுமார் 800 பயணிகளுடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியது.
மாலை நீஸிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து, இரவு 19:30 முதல் அதிகாலை 4 மணி வரை மார்செயில் அருகிலுள்ள எஸ்தாக் (Estaque) பகுதியில் நகராமல் நின்றது. இந்த விபத்துக்குப் பிறகு மீட்பு குழுக்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆரம்ப தகவல்களின் படி, இது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நீண்ட நேரம் எடுத்ததால் தொடருந்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது. தொடருந்தில் இருந்த பயணிகள் எந்தத் தகவலும் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். பின்னர், தொடருந்து மார்செயில் Saint-Charles நிலையத்துக்கு திரும்பி, பயணிகள் அங்கு இறக்கப்பட்டனர்.
பயணிகள் இரவு முழுவதும் நிலையத்தில் காத்திருந்தனர், சிலர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் காலை அவர்கள் மீண்டும் பரிஸை நோக்கிப் பயணம் செய்தனர். SNCF நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் விலையின் 150% இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பிற தொடருந்துகளின் பயணிகளுக்கும் முழு பணம் திருப்பி வழங்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan