குவைத்தில் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
30 பங்குனி 2026 திங்கள் 13:21 | பார்வைகள் : 243
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (30) அதிகாலை குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சின் எக்ஸ் ஊடக தளத்திலும் அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள கட்டடம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவரவும் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொழில்நுட்ப மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு பாரிய நெருக்கடிகளை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் அமெரிக்க படைத்தளங்களை இலக்குவைத்து வளைகுடா நாடுகளிலும் வரிசையாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது குவைத் நாட்டின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan