விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி
30 பங்குனி 2026 திங்கள் 09:10 | பார்வைகள் : 197
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் களமிறங்குகிறார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு கடந்த தேர்தலை விட இரு தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், விசிக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் லோக்சபா எம்பியாக இருந்து வரும் அவர், கட்டுமன்னார்கோவில் தொகுதியில் களமிறங்குகிறார். அந்தத் தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
வேட்பாளர்கள் விபரம்
காட்டுமன்னார்கோவில் - திருமாவளவன்
திண்டிவனம் - வன்னி அரசு
செய்யூர் - சிந்தனைச் செல்வன்
பெரியகுளம் - சக்திவேல்
கள்ளக்குறிச்சி - மாலதி
திருப்போரூர் - பன்னீர்தாஸ்
அரக்கோணம் - எழில் கரோலின்
பண்ருட்டி - அப்துல் ரகுமான்
தற்போதை விசிக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு மற்றும் ஆளூர் ஷா நவாஸ்க்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan