திமுக தேர்தல் வாக்குறுதி பாகம் 2 !
30 பங்குனி 2026 திங்கள் 06:24 | பார்வைகள் : 162
21. உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
22. புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
23. 18 லட்சம் கோடி அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
24. தமிழகத்தின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலர் ஆக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழகம் இடம் பெறும் வகையில் திராவிட மாடல் 2.0 அரசு அமையும்
25. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்
26. 5 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம். ஆயிரம் கிராம தெய்வக் கோவில்கள் மறு சீரமைப்பு
27. சிறுபான்மையினர் தொழில் துவங்க டாம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக வழங்கப்படும்.
28. அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள்.
29. மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி, வாழ்வாதாரம், திறன்மேம்பாடு, வங்கிக்கடன் கிடைக்க பல்வேறு உதவி கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை
30. கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கிமீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 10 ஆயிரம் கோடியில் சீர் செய்யப்படும்.
31. முக்கிய மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
32. திருச்சி ,மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் உலகத் தரத்தில் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.
33. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்படும்.
34. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.
35. மொழிப் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதிகளுடன் பொள்ளாச்சியில் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
36. நகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
37. தொழிற்சாலை அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும் பொருட்டு குழந்தைகள் காப்பகம் ஆயிரம் உருவாக்கப்படும்
38. பல்வேறு சிறப்பாக பணியாற்றிடும் திருநர், திருநங்கைகளுக்கு விருது.
39. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
40. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் துவங்க TABCEDCO வாயிலாக கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்படும்.
41. கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபும், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
42. பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.
43. தமிழகத்தில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
44. தமிழகத்தின் எம்எஸ்எம்இ நிறுவனப் பொருட்கள் உலகளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும்.
45. கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு ஊரகப்பகுதிகளில் 5 ஆயிரம் புத்தொழில்கள் துவங்கப்படும்.
46 . கூடைபந்து , கைப்பந்து, பாட்மின்டன், தற்காப்பு கலை, வாள்வீச்சு விளையாட்டுகளக்கான பல்நோக்கு வசதி கொண்டு உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
47. மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்இறங்கு தளங்கள் ஏற்படுத்தி தரப்படும்.
48. அனைத்து அரசு கலைக்கல்லூரிகளிலும் வைபை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள்
49. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
50. இல்லத்தரசி கூப்பன்:
8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங்மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதி வளர்ச்சியை உறுதி செய்ய
வட மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம்
டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சிதிட்டம்
மேற்கு மாவட்ட சிறப்பு வளர்ச்சி திட்டம்
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம்
ஆகியவை 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan