தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
29 பங்குனி 2026 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 232
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் விஜய் இன்று ( மார்ச் 29) வெளியிட்டார். சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். புதிதாக உருவான த.வெ.க., முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது; எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதற்காக, த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால், தேர்தல் கமிஷனில் முறையாக அனுமதி பெறாததால், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி ரத்தானது. இந்நிலையில், சென்னையில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடத்த, தேர்தல் கமிஷனிடம் அனுமதி கிடைத்தது. நுங்கம்பாக்கம் ஹோட்டலில், த.வெ.க., தலைவர் விஜய் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். தவெக விஐபி வேட்பாளர் பட்டியல் * விஜய்- பெரம்பூர், திருச்சி கிழக்கு * ஆதவ் அர்ஜூனா- வில்லிவாக்கம் * ஆனந்த்- தி.நகர் * அருண்ராஜ்- திருச்செங்கோடு * செங்கோட்டையன்- கோபிசெட்டிபாளையம் * நிர்மல் குமார்- திருப்பரங்குன்றம் *ராஜ்மோகன் - எழும்பூர் * திருப்பூர் வடக்கு- சத்யபாமா * வெங்கட்ரமணன்- மயிலாப்பூர் * செந்தில்குமார்- திருவொற்றியூர் *பல்லவி- திருவிக நகர் * செல்வம்- சேப்பாக்கம் * ராம்குமார்- அண்ணா நகர் * விஜய் ராமு- ராயபுரம் * குமார்- வேளச்சேரி * சரவணமூர்த்தி-சோழிங்கநல்லுார் * தென்னரசு- ஸ்ரீபெரும்புதுார் * காமாட்சி- பல்லாவரம் * சரத்குமார்- தாம்பரம் * தியாகராஜன்- செங்கல்பட்டு * விஜயராஜ்- திருப்போரூர் * ரஞ்சித்குமார்- காஞ்சிபுரம் * காந்திராஜ்- அரக்கோணம் * டாக்டர் கபில்-சோளிங்கர் *டாக்டர் சுதாகர்- காட்பாடி * தாமிரா- ராணிப்பேட்டை மேலும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் விபரம் பின்வருமாறு: * வேலுார்- வினோத் கண்ணன் * அணைக்கட்டு - வேல்முருகன் * கேவி குப்பம் - தென்றல் குமார் * குடியாத்தம் - சிந்து * வாணியம்பாடி - சையத் புர்ஹானுதீன் * ஆம்பூர் - இம்தியாஸ் * ஜோலார்பேட்டை - முனிசாமி * திருப்பத்துார் - டாக்டர் திருப்பதி * ஊத்தங்கரை -குமரவேல் * பர்கூர்- முரளிதரன் * கிருஷ்ணராயபுரம் - மதன் * குளித்தலை -பாலசுப்பிரமணி * மணப்பாறை -கதிரவன் * திருவரங்கம்- ரமேஷ் * திருச்சி மேற்கு - ராமமூர்த்தி * மணச்சநல்லுார் - சரவணன் * முசிறி - விக்னேஷ் * துறையூர் - ரவிசங்கர் * பெரம்பலுார் - சிவக்குமார் * குன்னம் - ரேவதி * கவுண்டம்பாளையம்- கனிமொழி * பண்ருட்டி - மணிகண்டன் * கடலுார் - ராஜ்குமார் * குறிஞ்சிப்பாடி - டாக்டர் ராஜ்குமார் * புவனகிரி -மகாலிங்கம் * சிதம்பரம் - டாக்டர் பாரி * காட்டுமன்னார்கோவில் - சீனிவாசன் * சீர்காழி - கோபிநாத் * மயிலாடுதுறை -ஹாருண் ரஷீத் * பூம்புகார் - விஜயாலயன் * நாகப்பட்டினம் - சுகுமார் * திருமயம்-சிந்தாமணி * ஆலங்குடி -துரை கந்தசாமி * அறந்தாங்கி - முகமது பர்வேஸ் * திருப்பத்துார் - சீனிவாச சேதுபதி * சிவகங்கை -குழந்தை ராணி நாச்சியார் * மானாமதுரை - இளங்கோவன் * மேலுார் - மதுரைவீரன் * மதுரை கிழக்கு - கார்த்திகேயன் * சோழவந்தான் - கருப்பையா * மதுரை தெற்கு - ஜோ பீட்டர் அனைத்து த.வெ.க., வேட்பாளர்களும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. விறுவிறுவென தேர்தல் பணிகளை துவக்க த.வெ.க., முடிவு செய்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan