Paristamil Navigation Paristamil advert login

ஈரான் அனுமதியுடன் இந்தியா நோக்கி வரும் மேலும் 2 கப்பல்கள்!

ஈரான் அனுமதியுடன்  இந்தியா நோக்கி வரும் மேலும் 2 கப்பல்கள்!

29 பங்குனி 2026 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 1075


ஈரான் அனுமதியுடன் மேலும் 2 இந்திய  கப்பல்கள் எல்ஜிபி   உடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வருவதால், ஈரானில் இருந்து கப்பலில், கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நம் நாட்டிற்கான கச்சா எண்ணெய் தேவையை போக்க, மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஈரான் தவிர, வாய்ப்புள்ள இதர நாடுகளில் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய், இந்தியாவுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரான் அனுமதியுடன் மேலும் 2 இந்திய கப்பல்கள் எல்ஜிபி உடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியாவின் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் கூடுதலான கப்பல்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜக் வசந்த், நந்தா தேவி, சிவாலிக் ஆகிய எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்தடைந்த நிலையில், தற்போது BW ELM மற்றும் BW TYR கப்பல்கள் இந்தியா வருகின்றன. கப்பல் போக்குவரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல கப்பல்கள் இன்னும் அனுமதிக்குக் காத்திருப்பதாக கடற்படை அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.