காங்கிரசின் அணுகுமுறை சரியல்ல: வி.சி.க., திருமாவளவன் விமர்சனம்
27 பங்குனி 2026 வெள்ளி 09:31 | பார்வைகள் : 370
காங்கிரஸ் முடிவுக்காக காத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏமாற்றம் அடைந்து, மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் நீடித்து, கூட்டணியே சிதறியுள்ளது.
காங்கிரஸ் - தி.மு.க., இடையே, தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால், வி.சி.க., மற்றும் கம்யூனிஸ்டுகள் என, 'இண்டி' கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கு 'சீட்' ஒதுக்கப்படவில்லை.
காங்கிரஸ் 16, தி.மு.க., 14 என தொகுதி உடன்பாடு எட்டியபோதிலும், 22 தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில், உழவர்கரை தொகுதியை தந்தால், கூட்டணியில் தொடருவோம் என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
அத்தொகுதியை ஒதுக்க, தி.மு.க., சம்மதம் தெரிவித்தபோதிலும், காங்கிரஸ் முரண்டு பிடித்ததோடு, காங்., வேட்பாளர், தன் மனுவை வாபஸ் பெறவில்லை. காங்கிரஸ் முடிவுக்காக காத்திருந்த திருமாவளவன் ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகவும், வேட்பாளர்கள் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக, திருமாவளவன் நேற்று அறிவித்தார்.
அவரது அறிக்கை:
உழவர்கரை தொகுதியை தி.மு.க., ஒதுக்கியபோதும், காங்கிரஸ் வேட்பாளர், தன் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால், கூட்டணியில் வி.சி.க.,வுக்கு தொகுதி உண்டா, இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரசின் இந்த அணுகுமுறை சரியல்ல; ஒட்டு மொத்தமாக, 'இண்டி' கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கும்.
வேறு வழியின்றி வி.சி.க., வேட்பாளர்களை அறிவிக்கிறோம். ஊசுடு தொகுதியில் அரியபுத்ரி, நெட்டப்பாக்கம் தொகுதியில் அமுதவன், உழவர்கரை தொகுதியில் புஷ்பலதா ஆகியோர் வி.சி.க., சார்பில் போட்டியிடுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan