நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிக்கோலஸ் மதுரோ
26 பங்குனி 2026 வியாழன் 06:36 | பார்வைகள் : 1438
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தம்மீதான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை (26) நியூயோர்க் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது.
இவர்கள் இருவர் மீதும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மதுரோவின் சட்டச் செலவுகளைச் செலுத்துவதற்காக வெனிசுலா அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தடுத்துள்ளது.
இவ்வாறு நிதியை முடக்குவது மதுரோவின் அரசியலமைப்பு ரீதியான சட்ட உரிமைகளை மீறும் செயல் என அவரது சட்டத்தரணி வாதிடுகிறார். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, "நான் நிரபராதி, நான் ஒரு கண்ணியமான மனிதன் மற்றும் எனது நாட்டின் அரசியலமைப்பு ரீதியான ஜனாதிபதி" என மதுரோ தெரிவித்திருந்தார். அவரது மனைவி சிலியா புளோரஸும் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தற்போது இருவரும் புரூக்ளினில் உள்ள தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் பிணை கோரவில்லை. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கிற்கான விசாரணைத் திகதியை நீதிபதி அல்வின் ஹெல்லர்ஸ்டைன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan