Paristamil Navigation Paristamil advert login

மொத்தம் 297அறிவிப்புகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை

மொத்தம் 297அறிவிப்புகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை

25 பங்குனி 2026 புதன் 06:42 | பார்வைகள் : 498


அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அதிமுகவின் 297  தேர்தல் வாக்குறுதிகளை  அக்கட்சி பொதுச் செயலர் இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

* ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச பிரிட்ஜ்
* முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்
* அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
* வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை
* 5 லட்சம் பெண்கள் டூவீலர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
* கச்சத்தீவை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை
*தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு  தீர்வு; நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்
*தெருவில் திரியும் நாய்கள், மாடுகள் போன்றவற்றை  பராமரிக்க விலங்குகள் நல மருத்துவமனை காப்பகம்
*நெசாவளர்களுக்கு நெசவுக் கூடத்தோடு சேர்ந்த  பசுமை வீடுகள்
*நெசவு தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்ட பிரீமியம் தொகையை அரசே ஏற்கும்
*65 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கான பென்சன் 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
*2000 அம்மா கிளினீக்குகள் துவங்கப்படும்
*பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் வருமான உச்ச வரம்பு நீக்கப்படும்.
*தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் வீடு கட்ட குடியிருப்பு மனை அளிக்கப்படும்.
*வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டம்
*மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்
*கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்
*கைத்தறி நெசாவளர்களுக்கான இலவச மின்சாரம் 450 யூனிட்டாக மாற்றப்படும்
* கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்
*கல்லறைத் தோட்டம் கப்ரிஸ்தான் அமைக்க இடவசதி
*ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
*10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நர்சுகள் பணி நிரந்தரம்
* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை
* ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிறப்பு செயலி
* ஜல்லிக்கட்டில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய்.காயம் அடைந்தால் 2 லட்சம். ஜல்லிக்கட்டு நடத்த அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கும்
* சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வலியுறுத்தல்
* ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி
* அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச்சாலை அமைக்கப்படும்
* நெல்லுக்கு ரூ.3,500 ஆதார விலை என நிர்ணயம் செய்ய நடவடிக்கை
*கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை
* திருநங்கைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பென்சன் திட்டம்
* சிறப்பு பொலிவுடன் அம்மா உணவகம்
* தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் போக்குவரத்து சரக்கு முனையம்
* தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்
* நெசவாளர் சங்கம் மூலம் இலவச வேட்டி, சேலை தயாரிப்பு, கொள்முதல்
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்
* சூரிய ஒளி பம்ப் செட்டுக்கு 100 சதவீத மானியம்
* தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில்  75 சதவீத வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்க சட்டம்
* ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள்
* திமுக அரசு அறிவித்த அரசு ஊழியர் பென்சன் திட்டத்தில் திருத்தம் செய்து சீரமைக்கப்படும்
* மாநிலங்களுக்கு  உரிய நிதி  நிர்வாகப் பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும்
* தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் தற்போதுள்ள விகிதாச்சார அளவு குறையக்கூடாது.
* அனைத்து முக்கிய நகரங்கள்,  சுற்றுலா தலங்களில் இலவச வைபை
* லட்சக்கணக்கான அரசு காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை
* சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம்
* கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை
* ராமேஸ்வரம் - தனுஷ்கோடியில் உலக தரத்தில் கடல் சுற்றுலா வசதி
* விவசாயிகள் விரும்பினால் சூரிய ஒளி பம்ப் செட்டுக்கு 100 சதவீத மானியம்
* இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர் மாநாடு
* வீடுகளில் சோலார் மின்உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 30 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் மானியம்
* தாலிக்கு தங்கம் திருமண உதவித்திட்டம் தொடர நடவடிக்கை. ; இலவச வேஷ்டி, பட்டு சேலை வழங்கவும் நடவடிக்கை
* 25 சர்வதேச பல்கலையில் தமிழ் இருக்கைள் அமைக்க நடவடிக்கை
* தற்போதுள்ள நடைமுறைப்படி பிற மாநில பல்கலைகளில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதி
* மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் தமிழிலும் நடவடிக்கை
* அறுவடை நெல்லை பாதுகாக்க சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய் வழங்கப்படும்
* தென்னையில் இருந்து இறக்கப்படம் நீரா பானம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள்  அமைக்கப்படும்
* பாசன ஏரிகள், ஊரணிகள் கால்வாய்கள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மூலம்  சீரமைக்கப்படும்
* கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம்; காவிரி - வைகை - காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் முடிக்க நடவடிக்கை
* அத்திக்கடவு அவினாசி திட்டம்,  சரபங்கா நீரேற்று திட்டத்தில் 100 ஏரிகள் நிரப்பப்படும்.
* தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஆய்வு
* 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் தொழில் துவங்க ரூ.25 லட்சம் வரை பிணையின்றி தொழிற்கடன்