Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா?

குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி  தெரியுமா?

23 பங்குனி 2026 திங்கள் 15:57 | பார்வைகள் : 2412


தற்போது பெரும்பாலும் எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது.. செல்போன்களில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகியவற்றில் அதிக நேரம் செலவு செய்வது சகஜமாகிவிட்டது. குறிப்பாக பொழுதை போக்குவதற்காக பலரும் செல்போனில் மூழ்கிவிடுகிறார்கள்.

இது ஒருபுறம் எனில் ஒரு வயது குழந்தை முதல் சிறுவர்கள் வரை பலருக்கும் செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் பெற்றோர்கள்  செல்போனை கொடுக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. பல வீடுகளில் செல்போனை கொடுக்கவில்லை என்றால் குழந்தைகள் சாப்பிடுவது கூட இல்லை.. ஆனால், அதன்பின்னணியில் இருக்கும் விபரீதங்கள் பெற்றோருக்கு புரிவதில்லை.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் அவர்கள் உடலில் பல பிரச்சனைகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக  தடிமன் , உடல் மற்றும் மனநல பாதிப்புகள், பேச்சுத் திறன் குறைபாடு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறைந்த தூக்கத்தால் கல்வித்திறன் சரிவு, கவனச்சிதற்ல், உடல் பருமன் மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பிரச்சனைகளும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்..