திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
21 பங்குனி 2026 சனி 06:25 | பார்வைகள் : 212
தமிழகத்தின் திராவிட மாடல், நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால், இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
உத்தரப்பிரதேச திட்டக்குழு அதிகாரிகள், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தீர்வு காணும் வகையில் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்த விவரத்தை தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூக நீதி ஆகியவற்றிலும் தமிழகத்தின் திராவிட மாடல், நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan