Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

20 பங்குனி 2026 வெள்ளி 09:00 | பார்வைகள் : 926


ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல் இதுவரையில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 1,394 பேர் பொதுமக்கள் என்றும், அவர்களில் குறைந்தது 210 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1,153 பேர் இராணுவத்தினர் என்றும், ஏனைய 639 பேரின் மரணங்கள் எவ்வகையைச் சேர்ந்தவை என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.