தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை
20 பங்குனி 2026 வெள்ளி 05:04 | பார்வைகள் : 979
தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும்.
சென்னை- தொழில்நுட்ப தலைநகரம்
திருச்சி- நிர்வாக தலைநகரம்
கன்னியாகுமரி- மெய்யியல் தலைநகரம்
மதுரை- மொழி, கலை மற்றும் பண்பாட்டு தலைநகரம்
கோவை- தொழில், வணிக தலைநகரம்
2. சட்டசபை, பார்லிமென்டில் பெண்களுக்கு தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
3. 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு பார்லிமென்ட் தொகுதி பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
4. ஜனாதிபதியை மக்களே தேர்வு செய்ய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வோம்.
5. மாநிலங்களுக்குள் ஓடும் ரயில்களின் நிர்வாகத்தை அரசியலமைப்பு திருத்தத்துடன் கையகப்படுத்துவோம்.
6. படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.
7. ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்க்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்போம்.
8. மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
9. தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan