சுவிட்சர்லாந்தில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து - சுற்றுலா தளத்தில் பெண் பலி
19 பங்குனி 2026 வியாழன் 04:16 | பார்வைகள் : 1242
சுவிட்சர்லாந்தில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள ஏங்கல்பெர்க் பனிச்சறுக்கு தங்குமிடத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 61 வயது பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மவுண்ட் டிட்லிஸ் சரிவில் கேபிள் காரில் தனியாக அந்தப் பெண் பயணித்து கொண்டிருந்த போது திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
நிட்வால்டன் மாகாண காவல்துறையின் தகவல் படி இந்த கோர சம்பவம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
விபத்தின் போது மலைப்பகுதியில் பலத்த காற்று வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே சுவிஸ் வான்வழி மீட்பு சேவையினர், காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கேபிள் கார் அறுந்து விழுந்த இந்த சம்பவம், இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan