Paristamil Navigation Paristamil advert login

கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி தளம் மீது ஈரான் தாக்குதல்

கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி தளம் மீது ஈரான்  தாக்குதல்

19 பங்குனி 2026 வியாழன் 06:11 | பார்வைகள் : 642


கடந்த மாதம் 28.02.2026 அன்று ஈரான் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை மேற்கொண்டது, இந்நிலையில் ஈரான் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருவதுடன் அண்டைய  நாடுகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி தளம் மீது ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் ஒன்று தாக்கியதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி நான்கு ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட போதிலும் ஒரு ஏவுகணை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைப் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் கத்தார் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வளைகுடா பிராந்திய எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.