தி.மு.க., எம்.எல்.ஏ., மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., விசாரிக்க கோரி பா.ஜ., வழக்கு
19 பங்குனி 2026 வியாழன் 13:03 | பார்வைகள் : 181
தொகுதி மேம்பாட்டு நிதியை, குடும்ப நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த, தி.மு.க., எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்து உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, தொகுதி மேம்பாட்டு நிதி, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 34 கோடி ரூபாயில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, தன் குடும்ப நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
எம்.எல்.ஏ.,வின் இந்த செயல், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் நடவடிக்கை என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.பி.ஐ., அல்லது உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து, அவரது சொத்துக்களை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். சிவா மீது, பல கோடி ரூபாய் நிதி முறைகேடு குறித்து, கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. அன்னியூர் சிவா குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும், 'ஹரி கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நிறுவனத்திற்கு, திட்டப் பணிகள் பெரும்பாலும் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan