நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் - 23 பேர் உயிரிழப்பு
18 பங்குனி 2026 புதன் 14:00 | பார்வைகள் : 1108
நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில் உள்ள தபால் நிலையமொன்றுக்கு அருகில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் அப்பகுதியிலிருந்து வெவ்வேறு திசைக்கு பாதுகாப்பு தேடி ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர் சந்தைப் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
அதனையடுத்து, மைதுகுரி பல்கலைக்கழக வைத்தியசாலை நுழைவாயில் பகுதியிலும் தொடர்ந்து கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மைதுகுரியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு “போகோ ஹரம்” என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது மைதுகுரி நகரம் முழுவதும் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் போகோ ஹரம் என்ற பயங்கர அமைப்பினை ஒடுக்க முன்னதாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan