Paristamil Navigation Paristamil advert login

வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி

வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி

18 பங்குனி 2026 புதன் 09:38 | பார்வைகள் : 1317


வட கொரியாவில் நடைபெற்று முடிந்த 2026 நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 வீத வாக்குகளை பெற்றதோடு, அனைத்து இடங்களையும் கைப்பற்றி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் சாதனை படைத்துள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99 வீதம் பேர் வாக்களித்துள்ளனர். 0.0037 வீதம் பேரால் வாக்களிக்க முடியவில்லை. 0.00003 வீதம் பேர் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.93  வீதமானோர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். 0.07 வீதமானோர் எதிராக வாக்களித்துள்ளனர். இந்த எதிர்ப்பு வாக்கு வீதமானது இணையத்தில் கிண்டலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

“அந்த 0.07 வீதமானோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி” என்றும் “அந்த 0.07 வீதம் பேரின் பெயர்களை கூறுங்கள்” என்றும் பலர் நகைச்சுவையாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.