ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துத் தடை
18 பங்குனி 2026 புதன் 09:36 | பார்வைகள் : 401
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைத் தடை செய்துள்ள தனது நாட்டின் முடிவை நியாயப்படுத்தி ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகளின் கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதை ஈரான் தடுத்துள்ளது.
இதன்படி, ஈரானுக்கு அருகில் உள்ள ஒரு நீர்நிலையை தமது எதிரிகள் பயன்படுத்துவதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தப் பிராந்தியத்தில் போர் நடந்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல நாடுகளும் கப்பல்களும் இந்த வழியைப் பயன்படுத்த விரும்புவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் முடிந்த பிறகு, ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்திற்கு "புதிய விதிகள் மற்றும் ஏற்பாடுகள் தேவை என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan