Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி

ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி

14 மாசி 2026 சனி 06:09 | பார்வைகள் : 312


ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று (பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று மாலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும், ஜமாஅத் - இ - இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஆனால், வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களில் கைப்பற்ற இருக்கிறது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்;

வங்கதேச பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி வங்கதேச தேசியக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவாக அளிக்கும்.

நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்