நில்ஸ் புயல்: Ile-de-France நோக்கி கனமழை!! 25 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில்!!
13 மாசி 2026 வெள்ளி 08:13 | பார்வைகள் : 2681
நில்ஸ் புயல் தென்-மேற்கு பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. Météo France 23 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது; Gironde மற்றும் Lot-et-Garonne பகுதிகள் வெள்ள அபாயத்திற்காக சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன.
Tarn-et-Garonne பகுதியில் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை இரண்டு ஆகியுள்ளது. Enedis தகவலின்படி, 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதில், இன்னும் சுமார் 4,50,000 வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன. Vigicrues எச்சரிக்கையின்படி, Garonne ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும்.
ஆல்ப்ஸ் பகுதியில் பனிச்சரிவு அபாயம் தொடர்கிறது. Savoie உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளன; சில இடங்களில் 60–100 செ.மீ. வரை பனி பெய்துள்ளது. Météo France மேலும் கனமழை Ile-de-France மற்றும் மத்திய பிரதேசம் நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது; இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நீடிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan