நாடு திரும்ப முடியுமா; முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு
13 மாசி 2026 வெள்ளி 10:39 | பார்வைகள் : 278
தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு திரும்ப முடியுமா; முடியாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். கடந்த 2019ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பை எதிர்த்தும், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், இரு மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'மல்லையா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க வேண்டுமெனில், முதலில் அவர் நாடு திரும்ப வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அங்கத் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முதலில் நாடு திரும்புங்கள். இல்லாவிட்டால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மாட்டோம். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள் என பதிவு செய்ய நேரிடும்.
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டு, அதே சட்ட நடவடிக்கைகள் மூலம் சலுகைகளை எதிர்பார்க்க கூடாது.
உங்கள் மீதான கருணை காரணமாக, இந்த மனுவை தள்ளுபடி செய்யாமல் மற்றொரு வாய்ப்பு தருகிறோம். வரும் 18ம் தேதிக்குள் நாடு திரும்ப முடியுமா? முடியாதா? என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan