விலங்குத் தோல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
12 மாசி 2026 வியாழன் 12:56 | பார்வைகள் : 1830
உலர்த்தப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விலங்குத் தோல்களுடன் நபர் ஒருவர் நேற்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர்களுக்கான 'சிவப்பு வழித்தடம் ஊடாக இந்தத் தோல்களை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே அவர் கைதாகியுள்ளார்.
பணப்பைகள் தயாரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவற்றின் 19 தோல் பகுதிகள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான ஏனைய சட்டவிதிமுறைகளை மீறி இந்தத் தோல்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த வர்த்தகர், தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவற்றைத் தனது பயணப் பொதிகளில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
சுங்க அதிகாரிகளிடம் இவை 'ஆடைகள்' எனக் கூறி அவர்களை திசைதிருப்ப அவர் முயற்சித்துள்ளார்.
இருப்பினும், அதிகாரிகள் அவரது பயணப் பொதிகளை நுணுக்கமாகப் பரிசோதித்ததில் இந்தத் தோல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan