Paristamil Navigation Paristamil advert login

தீ விபத்து அபாயம் காரணமாக BMW நூற்றுக்கணக்கான வாகனங்கள் திரும்பப் பெறுகிறது!!

தீ விபத்து அபாயம் காரணமாக BMW நூற்றுக்கணக்கான வாகனங்கள் திரும்பப் பெறுகிறது!!

12 மாசி 2026 வியாழன் 08:00 | பார்வைகள் : 504


தீ விபத்து அபாயம் காரணமாக BMW நூற்றுக்கணக்கான வாகனங்களை திரும்பப்பெறுகிறது. தயாரிப்பு சோதனைகள் மற்றும் வாடிக்கையாளர் புகார்களின் அடிப்படையில், சில வாகனங்களில் என்ஜின் ஸ்டார்டர் கோளாறு ஏற்படக்கூடும் என்றும், மிக மோசமான சூழலில் அது தீப்பற்ற வழிவகுக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கை 2, 3, 4, 5, 6, 7 சீரிஸ் மற்றும் X4, X5, X6, Z4 போன்ற பல மாடல்களை உள்ளடக்குகிறது. இவ்வாகனங்கள் ஜூலை 2020 முதல் ஜூலை 2022 வரை தயாரிக்கப்பட்டவை. அதிக எண்ணிக்கையிலான என்ஜின் தொடக்கங்களுக்குப் பிறகு ஸ்டார்டர் கூறுகளில் சேதம் ஏற்பட்டு குறுக்கு மின்சாரம் மற்றும் அதிக வெப்பம் உருவாகலாம் என்று BMW விளக்கியுள்ளது. இதனால், என்ஜின் தொடங்கியதும் வாகனத்தை கண்காணிப்பின்றி விட்டு செல்ல வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் ஸ்டார்டர் மாற்றப்பட வேண்டும்; சில மாடல்களில் பேட்டரியும் மாற்றப்படும். இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கை நிறுவனத்தின் நிதி நிலைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்