Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு விவகாரம்: பிடி கொடுக்காத திமுக; இறங்கி வந்த காங்கிரஸ்

ஆட்சியில் பங்கு விவகாரம்: பிடி கொடுக்காத திமுக; இறங்கி வந்த காங்கிரஸ்

12 மாசி 2026 வியாழன் 08:23 | பார்வைகள் : 190


தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கத் தொடங்கிய 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை பிடித்த பிறகு, தி.மு.க., அ.தி.மு.க. என திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் கட்சியும் தள்ளப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. 2006 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது.இந்த முறை தொடருமா?2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதேபோல், 2016 தேர்தலிலும் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இப்படி தொடர்ந்து 20 ஆண்டுகள் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறையும் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது.காலம் தாழ்த்திய தி.மு.க.காரணம், காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இடம் என அடுக்கடுக்கான கோரிக்கைகளை வைத்ததால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. அதிருப்தி அடைந்தது. அதனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழுவை அமைக்காமலும் காலம் தாழ்த்தி வந்தது. மாவட்ட தலைவர்கள் கூட்டம்இந்த நிலையில், டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க அனைத்து மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் சென்றனர். தமிழகத்தில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். தமிழக நிர்வாகிகளுடன் பேச்சுகூட்ட இடைவெளியின்போது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேசினார்கள். அவ்வாறு, தமிழ்நாடு நிர்வாகிகளை அழைத்து பேசியபோது, அவர்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

நாம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த குழு அமைத்து 70 நாட்கள் ஆகியும் இதுவரை நம்மை அழைத்து பேசவில்லை. தி.மு.க. தலைமையும், கட்சி நிர்வாகிகளும் நம்மை மதிப்பது இல்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். 35 தொகுதிக்கு குறையக்கூடாதுஇதை கேட்ட காங்கிரஸ் மேலிட தலைவர்களோ, சென்னை திரும்பிய உடன் நேராக தி.மு.க. தலைமையிடம் சென்று ஏன் பேச்சு வார்த்தைக்கு இன்னும் குழு அமைக்காமல் உள்ளீர்கள்.

உடனே எங்களை அழைத்து பேசுங்கள் என்று கோரிக்கை வையுங்கள். அவர்கள் (தி.மு.க.) ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுப்பதால், தொகுதிகளையாவது 41 ஆக கேட்டு வாங்குங்கள். எந்த வகையிலும் 35-க்கு குறையக்கூடாது.ஆட்சி அதிகார கோரிக்கையை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியும் இறங்கி வந்ததை கேள்விப்பட்ட உடன் தி.மு.க. தலைமையும் உடனடியாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை 22-ந் தேதி தொடங்கும் என்று அறிவித்துவிட்டது.

கூட்டணி தொடரும்ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையில் காங்கிரஸ் அழுத்தமாக இருந்ததால், தி.மு.க. காலம் தாழ்த்தி வந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி இறங்கி வந்தாலும், தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை உடனே தொடங்காமல், 10 நாட்கள் கழித்தே தொடங்க தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால், கூட்டணிக்குள் உரசல் தொடர்ந்தாலும், இந்தத் தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே தெரிகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்