நில்ஸ் புயல்: 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று எச்சரிக்கை!! 25 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!
11 மாசி 2026 புதன் 15:15 | பார்வைகள் : 3257
“நில்ஸ்”(Nils) புயல் இன்று மாலை அட்லாண்டிக் கடல் வழியாக பிரான்ஸின் தென்பகுதியை தாக்கவுள்ளது. இதற்கு முன் தென்-கிழக்கு மற்றும் கோர்சிக்கா பகுதிகளில் கடும் காற்றுடன் ஒரு தாழ்வு மண்டலம் கடந்து செல்கிறது.
25 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமவெளிகளில் மணிக்கு 140 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும். இந்த புயலுடன் கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே நீரால் நனைந்த பகுதிகளில் வெள்ளநிலை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது. தென்பகுதி முழுவதும் 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வேகத்தில் காற்று வீசும்; அட்லாண்டிக் கடற்கரையில் 8 முதல் 9 மீட்டர் உயரமுள்ள அலைகள் உருவாகலாம். கடற்கரை பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
மேலும், தென்-மேற்கு பகுதியில் கடும் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி அபாயமும் உள்ளது. மின்னல் தாக்கங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம். மலைப்பகுதிகளில் வெப்பநிலை உயர்வால் பனிச்சரிவு, மண் சரிவு ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. வடபகுதி பெரும்பாலும் இந்த புயலிலிருந்து தப்பும். ஆனால் இல்- து- பிரான்ஸ் பகுதி உட்பட வடபகுதியில் மணிக்கு 70–90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan