நவிகோ அட்டையில் - புதிய அட்டகாசமான வசதி!!
11 மாசி 2026 புதன் 11:00 | பார்வைகள் : 297
பொது போக்குவரத்துக்களில் பயணம் செய்ய பயன்படும் நவிகோ அட்டைகளில் புதிய வசதி ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக Île-de-France Mobilités முதல்வர் Valérie Pécresse தெரிவித்தார்.
‘பங்கு ஆட்டோ!’ எனப்படும் கார்பூலிங் வசதியை பயன்படுத்தி இன்னொருவருடைய காரில் நீங்கள் பயணத்தை பகிர்ந்துகொள்ளும் போது அவற்றுக்கான கட்டணத்தை நீங்கள் நவிகோ அட்டை மூலம் செலுத்த முடியும்.
அதேவேளை, கார்பூலிங்கில் நீங்கள் பதிவு செய்யும்போது, ஒரு காரில் ஒருவர் அல்லது இருவர் பயணிக்க முடியும் எனவும், 20 கி.மீ தூரத்துக்கு ஒருவரிடம் இருந்து 2 யூரோக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாதத்துக்கு 200 யூரோக்கள் வரை சம்பாதிக்க முடியும். 20 கி.மீ பிற்பாடு உள்ள அனைத்து தூரத்துக்கும் கிலோமீற்றருக்கு 10 சதம் பெற முடியும். இவ்வாறு பயணிக்கும் போது மெற்றோ கட்டணத்தை விட குறைந்த செலவில் கார்பூலிங்கில் பயணிக்க முடியும் எனவும், சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக 10 மில்லியன் யூரோக்கள் செலவில் செயலி (App) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 50,000 பேர் தங்களை இதில் இணைத்துக்கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செயலியை தரவிறக்கு பெயர், முகவரி, தொடர்பு இலக்கம், நீங்கள் பயணிக்க விரும்பும் ‘ரூட்’ போன்றவற்றை பதிவு செய்தால் போதுமானதாகவும். முன்கூட்டியே உங்கள் பயணங்களை ‘புக்’ செய்துகொள்ள முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan