லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
11 மாசி 2026 புதன் 13:05 | பார்வைகள் : 285
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை லோக்சபா செயலாளரிடம் காங்கிரஸ் சமர்ப்பித்து உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ''லோக்சபாவில் மோடியின் இருக்கை அருகே சென்று காங்., எம்.பி.,க்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் கிடைத்தது. அதனாலேயே சபைக்கு வர வேண்டாம் என, அவரை கேட்டுக் கொண்டேன்'' என்று சபாநாயகர் ஓம் பிர்லா திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இன்று (பிப்ரவரி 10) மதியம் 1 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை, லோக்சபா செயலாளரிடம் காங்கிரஸ் சமர்ப்பித்து உள்ளது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பது பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது பா.ஜ., எம்.பி.,க்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி பேச விடுவது, எட்டு எம்.பி.,க்களை கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்தது இவற்றை குறிப்பிட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan