Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் புதிய நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

 இஸ்ரேலின் புதிய நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

10 மாசி 2026 செவ்வாய் 04:30 | பார்வைகள் : 1307


இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீனிய நிலத்தை பெறும் முறையை எளிதாக்குதல் மற்றும் பலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குக் கரையில் அதன் அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த தீர்மானம் ஆபத்தானது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீட்டையும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் சட்டவிரோத இறையாண்மை மற்றும் குடியேற்றங்களை நிலைநிறுத்தும் முயற்சி என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குடியேறிகளுடன் மோதலை தீவிரப்படுத்தவும் மேற்குக் கரையில் உள்ள ஹமாஸ் குழு பலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.