நவிகோ பாஸ் 52 யூரோக்கள் எனக்கூறி சிக்கலில் மாட்டிய மேயர் வேட்பாளர்!!
9 மாசி 2026 திங்கள் 21:59 | பார்வைகள் : 3939
பரிஸ் மாநகராட்சி தேர்தலுக்கான Reconquête கட்சியின் வேட்பாளர் Sarah Knafo, BFMTV-யில் பேட்டியளிக்கும் போது ஆண்டு நவிகோ போக்குவரத்து பாஸ் விலை « 52 யூரோக்கள் » என தவறாகக் கூறினார்.
உண்மையில், Île-de-France முழுவதும் பயணம் செய்ய உதவும் இந்த பாஸ் ஆண்டுக்கு சுமார் 1,000 யூரோக்களும், மாதத்திற்கு 90.80 யூரோக்களுமாகும். இந்தப் பெரிய தவறு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. பின்னர் வெளியிட்ட வீடியோவில், இது ஒரு « பெரிய சொல் தவறு » என்று Sarah Knafo ஒப்புக்கொண்டார். 50 யூரோக்கள் என்பது ஊழியர்களுக்கான மாதாந்த கட்டணம் என்றும், அதில் நிறுவனங்கள் பாதியைச் செலுத்துவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
அதே பேட்டியில், PSG அணியின் சாம்பியன்ஸ் லீக் வெற்றிகள் மற்றும் வீரர்கள் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கும் அவர் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவங்களை தொடர்ந்து, அரசியல் எதிரிகள் Sarah Knafoவை பரிசியர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய « அறியாமை » கொண்டவர் என விமர்சித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பல அரசியல் தலைவர்கள் அவரை கிண்டல் செய்து, பரிஸ் மேயர் பதவி தகுதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan