விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு சாதகம்: தினகரன் கணிப்பு
10 மாசி 2026 செவ்வாய் 12:46 | பார்வைகள் : 167
நடிகர் விஜயின் வருகை, தி.மு.க., ஓட்டு வங்கியை பெருமளவில் பாதிக்கும். அது, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும். அதன் பிறகு, தொகுதி பங்கீடு முடிந்து, தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும்.
தி.மு.க., கூட்டணி, வலுவான கூட்டணி, கொள்கை கூட்டணி என்றெல்லாம் கதை விடுகின்றனர். 'காங்கிரஸ் சார்பாக குழு அமைத்து பல மாதங்களாக ஆகிறது. இன்னும் தி.மு.க., சார்பாக குழு அமைக்கவில்லை' என காங்., - எம்.பி., கார்த்தி சொல்கிறார்.
தி.மு.க., கூட்டணி திரிசங்கு நிலையில் உள்ளது. ஒரே ஒரு குடும்பம், இந்த ஆட்சியை கையிலே வைத்துக் கொண்டு, தமிழகத்தை சுரண்டுகிறது. வாரிசுக்கு முடி சூட்டிட முதல்வர் துடிக்கிறார்.
தனி நபரின் ஆசாபாசங்களுக்கு அரசியல் நடத்த முடியாது. கட்சி என வரும்போது உறவு, நட்புக்கு எல்லாம் இடமில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., தனித்து போட்டியிட்டதால், தி.மு.க.,வுக்கு வாய்ப்பாக அமைந்தது. இம்முறை அந்த வாய்ப்பு இருக்காது.
த.வெ.க., தலைவர் விஜயால், பிற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கருத்துக் கணிப்புகளில் கூறுகின்றனர்.
உண்மையில் விஜயின் வருகை, தி.மு.க., ஓட்டு வங்கியை பெரிய அளவில் பாதிக்கும்; தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும். இதனால் தான், விஜயை நான் வரவேற்கிறேன்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan