நேரசூசியில் கோட்டைவிட்ட TGV, Intercity, TER சேவைகள்!!
9 மாசி 2026 திங்கள் 18:39 | பார்வைகள் : 233
கடந்த 2025 ஆம் ஆண்டில் நேரசூசியினை கடைப்பிடித்த பொது போக்குவரத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிக மோசமான தாமதங்களை எதிகொண்ட சேவையாக TGV, Intercity, TER போன்றவை உள்ளன.
TGV இன் Inoui மற்றும் Ouigo போன்ற சேவைகள் 78.6% சதவீதமான சேவைகள் மட்டுமே ‘குறித்த நேரத்தில்’ இயங்கியுள்ளன. முந்தைய 2024, 2023 ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
அதேவேளை, Intercity சேவைகளும் இந்த பட்டியலில் உள்ளன. 74.4% சதவீதமான சேவைகள் மாத்திரமே ‘சொன்ன நேரம்’ கடைப்பிடித்துள்ளது.
TER சேவைகள் கொஞ்சம் பரவாயில்லை ரகம். 90.6% சேவைகள் நேரசூசியை கடைப்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் சிறப்பாக கடைப்பிடித்த சேவையாக இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் Transilien சேவைகள் 94% சதவீதமான சேவைகள் ‘சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் இந்த கோட்டைசாமி!’ என நேரகாலத்தோடு செயற்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த போக்குவரத்து நேரசூசி பட்டியல் வெளியிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan