இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
10 மாசி 2026 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 197
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான். அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலையை பிப்ரவரி 09 முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட ரேஞ்ச் ரோவர் காரை முதல்வர் ஸ்டாலின் ஓட்டிப் பார்த்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தொழில்துறையின் முக்கிய முகமாக டாடா நிறுவனம் உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் இருந்து வருகிறது. டாடா என்றாலே அதற்கு ஒரு ஆழமான உறவு உள்ளது.
தமிழகத்தில் இருக்கும் Titan, Tcs, தாஜ் ஹோட்டல் உள்ளிட்டவைகள் எல்லாம், 'தமிகத்தின் மீது டாடா நிறுவனம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளங்கள். மறைந்த ரத்தன் டாடா கண்ட கனவு படியே, டாடா மோட்டார்ஸ் தமிழகத்தில் மேற்கொள்ளக் கூடிய இந்த முதலீடு, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தயா முழுவதும் புதிய எரிசக்தி வாகன வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும்.
வேலைவாய்ப்பு
வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவில் வாகனம் மற்றும் மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழகம் தான். இங்கு தொடங்கப்பட்டுள்ள ஆலை தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே முக்கியமானது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம். மின்சார வாகன உற்பத்தி, மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. உலக அளவில் போட்டியிடும் வாகனங்களை தயாரிக்கும் ஆலை தமிழகத்திலும் உள்ளது என்பது நமக்கு பெருமை. இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான்.
அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான். மேலும் மோட்டார் வாகன துறையில் தமிழகம் டாப்பில் இருக்கிறது என்றால் அதற்கு பெரிய பாரம்பரியமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய திட்டங்களை தமிழகத்தில் நிறுவியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan