Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சி

9 மாசி 2026 திங்கள் 17:25 | பார்வைகள் : 198


ஜப்பானில் நடந்த இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தகாய்ச்சி ஏற்கெனவே வலிமையான, சக்தி படைத்தவர், அறிவாற்றல் கொண்ட தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்” என ஜப்பான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சானே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டை உண்மையாக நேசிப்பவர் தகாய்ச்சி என்றும் கூறிய ட்ரம்ப், எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தகாய்ச்சியை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜப்பான் நாட்டில் நேற்று (8) நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 316 இடங்களைப் பெற்று, அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சானே தகைச்சி (Sanae Takaichi), அதிக வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அடைந்திருக்கிறார்.

இந்நிலையில், தகாய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ட்ரம்ப், அண்மையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு தகாய்ச்சியின் நிர்வாகத் திறமையையும் தலைமைப் பண்பையும் கண்டு ட்ரம்ப் பாராட்டியிருந்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்