Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து - 30 பேர் பலி

நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து - 30 பேர் பலி

9 மாசி 2026 திங்கள் 17:18 | பார்வைகள் : 205


நைஜீரியாவின் கானோ மாகாணத்தில் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள்,  சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரெய்லர் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லொறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் லொறியில் பயணித்த 30 பேர் உயிரிழந்ததோடு இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வாகனம் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இக்கொடூர விபத்து நேர்ந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகையை கொண்ட நைஜீரியா நாட்டில் வீதி விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதற்கும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் வீதிகள் சீரற்று காணப்படுகின்றமை, போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமுல்படுத்தாமை என்பனவே காரணம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்