Paristamil Navigation Paristamil advert login

பரோட்டா சாப்பிட்டால் கேன்சர் வருமா?

பரோட்டா சாப்பிட்டால் கேன்சர் வருமா?

9 மாசி 2026 திங்கள் 15:56 | பார்வைகள் : 270


இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் நம் அனைவரது வாழ்கையையும் ஆக்கிரமித்துவிட்டது. இளைஞர்களின் உணவுப் பழக்கங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள பரோட்டா, சுவைக்காக அதிகம் விரும்பப்பட்டாலும், அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மைதா அடிப்படையிலான இந்த உணவு, நீண்டகாலத்தில் குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்..

பரோட்டா தயாரிக்க பயன்படும் மைதா மாவில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருப்பதால், அது செரிமான முறையை பாதிக்கக் கூடும். அடிக்கடி மைதா உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலத்தில் குடல் குறைபாடுகள் உருவாகும் அபாயம் உள்ளது.

மேலும், எண்ணெய் அதிகமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பரோட்டா உடல் எடையை உயர்த்துவதோடு, மெட்டபாலிசம் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கலாம். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக பரோட்டா சாப்பிடும் பழக்கம் உடல் சோர்வு மற்றும் செரிமான சிக்கல்களை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கின்றன.

இதற்கு மாற்றாக, தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறி, முழுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை சேர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பரோட்டாவை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுகிறது.

உடற்பயிற்சி, சரியான தூக்கம் மற்றும் சமநிலை உணவு முறையை பின்பற்றினால் பரோட்டா போன்ற உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். சுவைக்காக மட்டும் அல்ல, உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு உணவு தேர்வு செய்வது தான் நீண்டகால ஆரோக்கியத்தின் முக்கிய அடிப்படை என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மைதா உணவுகளை பிரதானமாக எடுத்துக் கொள்ளும் மேற்கத்திய மக்கள் அதிகமானோர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்தியர்கள் மத்தியிலும்   குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு, மைதா உணவுகள் அதிகரிப்பது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்