வெளிநாடொன்றில் சாகசம்! - மூன்று பிரெஞ்சு நபர்கள் மருத்துவமனையில்!!
9 மாசி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 2513
பிரான்சில் இருந்து புறப்பட்டு பெல்ஜியத்துக்குச் சென்ற மூவர் கொண்ட குழு, விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
30 கி.மீ அதிகபட்ச வேகம் உள்ள வீதியில் 100 கி.மீ வேகத்தில் பயணித்து விபத்தில் சிக்கியுள்ளனர். சுரங்கம் ஒன்றுக்குள் இந்த வேகத்தில் பயணித்த நிலையில், மதில் ஒன்றுடன் மோதி கார் தடம்புரண்டு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் பெல்ஜியத்தின் மேற்கு ஃப்ளாண்டர்ஸ் பகுதியான Menin நகரில் பெப்ரவரி 8, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இடம்பெற்றது.
Peugeot 308 CC ரக காரில் அவர்கள் பயணித்த நிலையில், அதிவேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை அடுத்து, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan