பரிசில் இருந்து புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!!
8 மாசி 2026 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 2734
பரிசில் இருந்து அட்லாண்டா நகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று, அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
டெல்டா நிறுவனத்துக்குச் சொந்தமான எயார்பஸ் A330-300 ரக விமானம், நேற்று பெப்ரவரி 7, சனிக்கிழமை சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவை நோக்கி நூற்றுக்கணக்கான பயணிகளுடன் ஆரம்பித்த இந்த பயணம், மிக குறுகிய நேரத்தில் முடிவுக்கு வந்தது.
விமானம் ஒருமணிநேரமும் இருபது நிமிடங்களும் பயணித்ததை அடுத்து, லண்டன் ஹீதுரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
“அவசரகால தரையிறக்கம்’ என மட்டுமே காரணம் தெரிவிக்கப்படுகிறது. பயணம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்றும் பரிசில் இருந்து பெய்ரூட் நோக்கி பயணித்த விமானம் ஒன்று அபித்ஜான் நகரின் விமான தளம் ஒன்றில் தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan