518 நாட்களில் பிரான்ஸிலிருந்து சீனாவிற்கு கால்நடையாக சென்ற இரண்டு இளைஞர்கள்!!
8 மாசி 2026 ஞாயிறு 07:58 | பார்வைகள் : 2597
லொயிக் வொய்சோ (Loïc Voisot) மற்றும் பெஞ்சமின் அம்ப்லோ (Benjamin Humblot) என்ற இரண்டு பிரஞ்சு இளைஞர்கள், காலநிலை மாற்றத்திற்கான பாதிப்பை குறைப்பதற்காக, பிரான்சிலிருந்து சீனாவின் ஷங்காய் வரை கால்நடையாகப் பயணம் செய்துள்ளனர்.
2024 செப்டம்பரில் அன்னசியிலிருந்து (Annecy) புறப்பட்ட அவர்கள், 518 நாட்களில் 16 நாடுகளை கடந்து 12,850 கிலோமீட்டர்கள் நடந்து, தங்களின் இறுதி இலக்கான ஷங்காயை அடைந்துள்ளனர். இந்தப் பயணம், கிழக்கு திசையில் நடந்து அடையக்கூடிய மிகத் தொலைவான இடமாக சீனாவை அடையும் ஒரு “பெரும் சாகசம்” என அவர்கள் விவரித்துள்ளனர்.
பயணம் உடல் ரீதியாக கடினமானதாக இருந்தாலும், பல நாடுகளில் சந்தித்த மக்களின் உதவி மற்றும் அன்பு அவர்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. கடுமையான குளிர்காலங்கள், உஸ்பெகிஸ்தானின் பாலைவனம் போன்ற சவால்களை எதிர்கொண்ட அவர்கள், இந்த முயற்சியை செய்யத் துணிந்ததற்காக பெருமை கொள்கிறார்கள். தற்போது ஓய்வு எடுப்பதே முக்கியம் எனக் கூறினாலும், எதிர்காலத்தில் இந்த சாகசத்தை அமெரிக்காவை நோக்கி தொடரும் எண்ணத்தையும் அவர்கள் முற்றிலும் மறுக்கவில்லை.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan