டிக்டொக் தளத்தில் வீரவசனம் - பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் சிக்கினார்!!
8 மாசி 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2923
தற்கொலை குண்டுதாரியாக மாறி ஈஃபிள் கோபுரத்தை தகர்ப்பேன் என கருத்து வெளியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய நபர் ஒருவர் கடந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். Côtes-d'Armor மாவட்டத்தைச் சேர்ந்த அவர் Paimpol நகரில் கல்வி கற்று வருகிறார். அவர் கடந்தவாரம் டிக்டொக் சமூவலைத்தளமூடாக நேரலையில் பேசியிருந்த விடயம், அவரைக் கைது செய்யுமளவுக்குச் சென்றுள்ளது. “தற்கொலை குண்டுதாரியாக மாறி, ஈஃபிள் கோபுரத்தின் கீழ்ச் சென்று வெடிப்பேன்!” என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ஏற்கனவே பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த நிலையில், இந்த வெறுப்பு பேச்சு அவரை கைது செய்ய தூண்டியுள்ளது.
அவரது வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக அவரை தடுத்து வைத்துள்ளனர். இந்த பெப்ரவரி மாத இறுதியில் அவர் Saint-Brieuc நகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan