சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பிரஞ்சு விண்வெளி வீராங்கனை!!!
7 மாசி 2026 சனி 20:04 | பார்வைகள் : 2576
பிரான்ஸ் விண்வெளி வீராங்கனை சோபி அடெனோட் (Sophie Adenot) பங்கேற்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நோக்கிய பயணம் பிப்ரவரி 11 அன்று நடைபெறும் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
SpaceX நிறுவனத்தின் Falcon 9 ஏவுகணையில் முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் பயணம் தள்ளிப் போகலாம் என்ற அச்சம் இருந்தது. ஆனால் அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான FAA நடத்திய விசாரணை முடிவடைந்து, ஏவுகணைகள் மீண்டும் பறக்க அனுமதி வழங்கப்பட்டதால் திட்டமிட்ட கால அட்டவணை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Crew-12 குழுவின் ஒரு உறுப்பினராக சோபி அடெனோட், Cap Canaveral புளோரிடா மாநிலத்தில் உள்ள Kennedy விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை காலை 6:01 மணிக்கு (பரிஸ் நேரப்படி 12:01) புறப்பட உள்ளார். வானிலை அல்லது கடைசி நிமிட தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் பிப்ரவரி 12 அல்லது 13 தேதிகளில் மாற்று ஏவுதல் வாய்ப்புகள் உள்ளன. “எப்சிலான்” (mission Epsilon) பணிக்காக அவர் சுமார் ஒன்பது மாதங்கள் ISS-ல் தங்க உள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan