5.9 மில்லியன் யூரோக்கள் விவகாரம்: PSG-க்கு எம்பாப்பே கொடுத்த சட்ட அதிர்ச்சி!!
7 மாசி 2026 சனி 11:37 | பார்வைகள் : 3395
கிலியான் எம்பாப்பே, பரிஸ் செயின்ட்-ஜெர்மேன் (PSG) கிளப்பிடம் இருந்து 5.9 மில்லியன் யூரோக்கள் பெறுவதற்காக அதன் தலைமையகத்திற்கு ஒரு நீதிமன்ற அதிகாரியை அனுப்பியுள்ளார்.
இந்த தொகை, சம்பளத்துடன் கூடிய விடுப்புகள் மற்றும் வட்டி தொடர்பானதாகும். கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொழிலாளர் நீதிமன்றம், PSG தனது முன்னாள் வீரருக்கு செலுத்தப்படாத சம்பளங்கள் மற்றும் போனஸ்களுக்காக மொத்தம் 60.9 மில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதில் PSG, 55 மில்லியன் யூரோக்களை மட்டும் செலுத்தி, மீதமுள்ள 5.9 மில்லியன் யூரோவை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் PSG “மிகவும் ஆச்சரியமடைந்ததாக” தெரிவித்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகு அனைத்தும் வழக்கம்போல் நடைபெற்று வந்ததாகவும், பணம் செலுத்தும் நடைமுறைகள் குறித்து இரு தரப்புகளும் பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும் கிளப் கூறுகிறது. ஆனால் எம்பாப்பேயின் வழக்கறிஞர்கள், கிளப்புடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மறுத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் உரிமை PSG-க்கு பிப்ரவரி 19 வரை உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan