விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: ஐகோர்ட்
6 மாசி 2026 வெள்ளி 14:50 | பார்வைகள் : 1931
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
நடிகர் விஜய் தனது நடிப்பில் வெளியான 'புலி' பட வருமானத்தில் ரூ. 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை புகார் கூறியிருந்தது. இவ்வாறு வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக, வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில், இன்று (பிப்ரவரி 06) காலை 10:30 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. விஜய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், விஜய்க்கு வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நிபந்தனை
இந்த வழக்கில் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்ய ஐகோர்ட் நிபந்தனை அளித்துள்ளது. ''காலவரம்பை தவிர்த்து, எஞ்சிய அம்சங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விஜய் முறையிடலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan