காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
6 மாசி 2026 வெள்ளி 10:49 | பார்வைகள் : 535
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் மூலம், நம் செரிமான மண்டலம் மேம்படுவது முதல் உடலின் அசுத்தங்கள் வெளியேறுவது வரை பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படியென்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் மேம்படும். குளிர்ந்த நீர் அருந்தும்போது, உணவிலுள்ள கொழுப்புகளை திடப்படுத்தி, செரிமானத்தை கடினமாக்கும். ஆனால் வெதுவெதுப்பான நீர் உணவை எளிதில் உடைத்து செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் வெதுவெதுப்பான நீர் குடல் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை (Vasodilation) அதிகரிப்பதால், ஊட்டச்சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
வெதுவெதுப்பாக தண்ணீர் குடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உடலின் நாளமில்லா சுரப்பியலின் செயல்கள் மேம்பட்டு வியர்வை அதிகரிக்கும். இதன் வழியே உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், சருமமும் சிறுநீரகமும் மேம்படும். குறிப்பாக சருமத்தின் அழுக்குகள் நீங்கி பருக்கள் தடுக்கப்படுவதுடன், சருமம் பொலிவாகவும் செய்யும். இதற்கு காரணம், வெதுவெதுப்பான நீரை குடிக்கும்போது, உடல் தனது உட்புற வெப்பநிலையைச் சமன் செய்ய முயற்சிக்கும். இந்தச் செயல்பாட்டில் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, தேவையற்ற நச்சுக்கள் வெளியேறத் தொடங்குகின்றன.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக தண்ணீர் குடிக்கும்போது, உடலில் வெப்பம் அதிகரிப்பதால் வளர்சிதை மாற்றங்கள் ஊக்குவிக்கப்படும். இதேபோல உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் திசுக்களை உடைக்க வெதுவெதுப்பான நீர் உதவுகிறது. இது ஒரு மென்மையான 'Internal Scrub' போலச் செயல்பட்டு, தமனிகளில் உள்ள கொழுப்புப் படிமங்களை நீக்க உதவுவதாகக் கருதப்படுகிறது. மேலும் வெதுவெதுப்பான நீர் வயிறு நிறைந்த உணர்வைத் (Satiety) தருகிறது. இதனால் காலை உணவின் போது அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்தப் பழக்கம் நாள்படும்போது உடல் எடை குறையும்.
வெந்நீரானது தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். குறிப்பாக இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தசைப் பகுதிகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரித்து தசை வலியைத் தணிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மாதவிடாய்க்கால வலியை எதிர்கொள்ளும் பெண்களுக்கும்கூட இது சிறந்த தீர்வை கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan