அமெரிக்க ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளத்துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படும்; பியூஷ் கோயல்
5 மாசி 2026 வியாழன் 09:27 | பார்வைகள் : 706
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால்வள துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
பிப்.2ம் தேதி இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த 50 சதவீதம் வரி என்பதை 18 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பல அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமானவை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந் நிலையில் லோக்சபாவில், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால்வளம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
லோக்சபாவில் அவர் பேசியதாவது;
2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வந்ததில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்கும் வண்ணம் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வந்தன என்பதை அவை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதை மனதில் கொண்டு, கடந்தாண்டு முதல் இரு தரப்பிலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆழமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இரு தரப்பினரின் முக்கியமான, பரந்த விருப்பங்களை கருத்தில் கொண்டு முக்கிய துறைகளை பாதுகாக்க முயற்சிப்பது இயல்பான ஒன்று. சிறந்த சாத்தியமான முடிவை எடுக்க உறுதி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு தரப்பினரும், முக்கிய துறைகளை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நம்நாட்டின் முக்கிய துறைகளான விவசாயம் மற்றும் பால்வளம் ஆகியவற்றின் நலன்களை பாதுகாப்பது என்பதை வெற்றிகரமாக உறுதி செய்திருக்கிறோம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan